மலையகப் பகுதிகளில் தபால் சேவைகளை மேம்படுத்துவது மற்றும் அங்குள்ள மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு தீர்வு காண்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் தபால் விநியோக நடவடிக்கைகளை சீராக முன்னெடுப்பது குறித்து விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, புதிய தபால் ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வது மற்றும் தற்போது சேவையில் உள்ள ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான அம்பிகா சாமுவேல் மற்றும் கிட்ணன் செல்வராஜ் ஆகியோரும் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.


අනුර කුමාර දිසානායක
හරිනි අමරසූරිය
සජිත් ප්රේමදාස
සිවඥානම් ශ්රීතරන්
රවුෆ් හකීම්
රනිල් වික්රමසිංහ
ආගම / බුද්ධාගම
ආදර්ශ පාඨය
ආධ්යාත්මිකත්වය
ඉතිහාසය
ඉන්දියාව
අනුරාධපුර