மத்திய மலைப்பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் பலத்த மழை காரணமாக, நல்லதண்ணிய – சிவனொளிபாதமலை பிரதான வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக அஹல கணுவ பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக, குறித்த வீதியூடான போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மண்சரிவு காரணமாக வீதியில் குவிந்துள்ள மண் மற்றும் கழிவுகளை அகற்றி, போக்குவரத்தை மீண்டும் வழமைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

இது தொடர்பான மீட்புப் பணிகளுக்காக விசேட குழுவொன்று சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஹற்றன் பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பெய்து வரும் மழையினால் மலைப்பகுதிகளில் பயணம் செய்வோர் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Share.
Leave A Reply

© 2026 Sinhala Win. All rights reserved.

Exit mobile version